பதவியை இன்று வேண்டுமானாலும் துறக்கத் தயார்: ஜனாதிபதி

பதவியை இன்று வேண்டுமானாலும் துறக்கத் தயார்: ஜனாதிபதி

ஜனாதிபதி பதவியை நாளை அல்ல இன்று வேண்டுமானாலும் துறக்கத் தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தன் பதவிக்காலம் குறித்து உச்சநீதிமன்றத்தின் கருத்தை கோரியிருந்த நிலையில், அது பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகியது. இந்நிலையில், ஜனாதிபதி நேற்று தனது டுவிட்டர் பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி பதவிக்காலத்தை வகிப்பதற்கு தனக்கு முடியுமான கால எல்லை தொடர்பில் உச்ச நீதிமன்றம் வழங்கும் எந்தத் தீர்ப்புக்கும் தான் தலைவணங்குவதாகவும், இதுதான் ஜனநாயகம் என்பபு எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், இப்பதவியில் தான் சதாகாலமும் இருக்க வேண்டும் என்று வரவில்லை என்றும் உயர்ந்த மனிதப் பண்புகளுடன் கூடிய, நாடொன்றை உருவாக்கும் கனவுடனேயே இந்தப் பொறுப்புக்கு வந்ததாகவும் கூறியுள்ள ஜனாதிபதி, அதற்கு எத்தகைய தடை ஏற்பட்டாலும் அதனை சவாலாக ஏற்றுக்கொள்ளத் தயார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதபதியின் இக்கோரிக்கை தொடர்பாக ஐந்து நீதிபதிகளை கொண்ட குழு ஆராய்ந்து வருகின்ற நிலையில், இது தொடர்பான தீர்ப்பு பொங்கல் தினத்தில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.