வடக்கு அமைச்சரவையில் புகுந்து விளையாடும் அயல்­நா­டு

வடக்கு மாகாண அமைச்­ச­ரவை விட­யத்­தில் அயல்­நாட்­டுத் தூத­ர­கம் ஒன்று மூக்கை நுழைத்­துள்­ளது.

கட்சி ஒன்­றி­னால் மாகாண அமைச்­சர் பத­விக்­குப் பெய­ரி­டப்­பட்ட ஒரு­வ­ருக்கு அந்­தப் பத­வி­யைக் கொடுக்க வேண்­டாம் என்று அறி­வு­றுத்­தல் வழங்­கப்­பட்­டுள்­ளது.

இந்த விட­யத்­தைக் கையா­ளும் தலை­வ­ரின் தனிப்­ பட்ட செய­லா­ள­ரி­டமே ஒரு ஆலோ­ச­னைப் பாணி­யில் இந்த அறி­வு­றுத்­தல் விடுக்­கப்­பட்­டது என்று தெரி­கி­றது.

தமது எதிரி நாடு ஒன்­றின் உள­வா­ளி­யாக குறித்த உறுப்­ ­பினர் இருக்­கி­றார் எனச் சந்­தே­கிப்­ப­தன் கார­ணத்­தா­லேயே அந்த நப­ருக்கு அமைச்­சர் பதவி கொடுக்­கக்­கூ­டாது என்று அந்த அறி­வு­றுத்­த­லின்­போது விளக்­க­ம­ளிக்­கப்­பட்­டுள்ளது.

முன்­னாள் ஆயு­தக் குழு ஒன்­றின் உறுப்­பி­னர் ஒரு­வ­ருக்கே இவ்­வாறு அமைச்­சுப் பதவி வழங்­க­வேண்­டாம் என்று கூறப்­பட்­டுள்­ளது.

அமைச்­சுப் பத­விக்கு அவ­ரது பெயர் அடி­பட்ட உட­னேயே அவ­ரது கட்­சி­யி­னரே அவ­ருக்கு எதி­ரா­கப் பல விட­யங்­களை அவிழ்த்­து­விட்­ட­னர் என்­ப­தும் குறிப்­பி­டத்­தக்­கது.

அயல்­நாட்­டின் கொழும்­புத் தூத­ர­கத்­தில் பணி­யாற்­றும் இரண்­டாம் நிலை அதி­காரி ஒரு­வர் அண்­மை­யில் யாழ்ப்­பா­ணம் வந்­தார்.

நக­ரி­லுள்ள விடு­தி­யில் தமிழ் அர­சி­யல்­வா­தி­க­ளைச் சந்­தித்­துப் பேசி­யுள்­ளார். முத­ல­மைச்­ச­ரை­யும் அவர் சந்­தித்­துப் பேசு­வ­தற்கு விரும்­பி­யுள்­ளார்.

இருப்­பி­னும் அதற்­கான சந்­தர்ப்­பம் கிடைக்­க­வில்லை. அந்­தச் சந்­திப்­பி­லேயே அமைச்­சர் நிய­ம­னம் தொடர்­பான அறி­வு­றுத்­தல் வழங்­கப்­பட்­டுள்­ளது.