புளொட்­டின் பதவி யாருக்கு?

மாற்­றி­ய­மைக்­கப்­ப­டும் வடக்கு அமைச்­ச­ர­வை­யில் புளொட் அமைப்­புக்கு அமைச்­சுப் பதவி வழங்­கப்­பட்­டால், அந்­தக் கட்சி சார்­பில் யாருக்கு அதனை வழங்­கு­வது என்­ப­தில் குழப்­பம் தோன்­றி­யுள்­ளது.

வடக்கு மாகா­ண­ச­பை­யின் அமைச்­ச­ரவை விரை­வில் மாற்­றி­ய­மைக்­கப்­ப­டும் என்­றும் இதன்­போது, புளொட்­டுக்கு அமைச்­சுப் பதவி வழங்­கப்­ப­டும் என்­றும் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் தெரி­வித்­தி­ருந்­தார்.

புளொட் அமைப்­புக்கு அமைச்­சுப் பதவி கிடைக்­கப் பெற்­றால் அந்­தக் கட்சி சார்­பில் யாரை நியமிப்­பது என்­ப­தில் குழப்­பம் தோன்­றி­யுள்­ள­தாக அறிய முடி­கின்­றது.

புளொட் அமைப்­பினை நேர­டி­யா­கப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி வவு­னியா மாவட்­டத்­தில் ஜி.ரி.லிங்­க­நா­த­னும், முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் க.சிவ­நே­ச­னும் (பவான்) உள்­ள­னர். வவு­னியா மாவட்ட உறுப்­பி­னர் ஜி.ரி.லிங்­க­நா­தனே, அமைச்­சர்­கள் மீதான ஊழல் மோசடி தொடர்­பில் மாகா­ண­ச­பை­யில் பிரே­ரணை சமர்­பித்­தி­ருந்­த­வர்.

இவரை அமைச்­சுப் பத­வியை ஏற்­கு­மாறு முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் கோரி­ய­போ­தும் அவர் அதனை மறு­த­லித்­தி­ருந்­தார். ‘‘பிரே­ரணை கொண்டு வந்­ததே அமைச்­சுப் பத­விக்­கா­கத்­தான் என்று கூறு­வார்­கள். இத­னால் அமைச்­சுப் பத­வியை நான் ஏற்க மாட்­டேன்’’ என்று கூறி­யி­ருந்­தார்.

முல்­லைத்­தீவு மாவட்ட உறுப்­பி­னர் க.சிவ­நே­சன், முத­ல­மைச்­ச­ருக்கு சுய­வி­வ­ரக் கோவை அனுப்­பி­ய­போது அவ­ருக்கு அமைச்­சுப் பதவி வழங்க முடி­யா­துள்­ளது என்று பதில் வழங்­கி­யி­ருந்­தார்.

ஊட­க­வி­ய­லா­ளர் சிவ­ராம் கொலை­யு­டன் தொடர்­பு­டை­ய­தாக அவ­ரது பெயர் குறிப்­பி­டப்­ப­டு­வ­தன் கார­ண­மாக அமைச்­சுப் பதவி வழங்க முடி­யா­தி­ருப்­ப­தா­கத் தெரி­வித்­தி­ருந்­தார்.

இத­னால், புளொட்­டுக்கு வழங்­கப்­ப­டும் அமைச்­சுப் பத­வியை யாருக்கு வழங்­கு­வது என்­ப­தில் குழப்­பம் தோன்­றி­யுள்­ளது.