பலபிடியவில் 6 கிலோ எடையுடன் குழந்தை பிறப்பு

பலபிடிய ஆதார மருத்துவமனையில் பென்தொட , ஹபுருகல பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய பெண்ணொருவர் 5 கிலோ 980 கிராம் எடையை கொண்ட குழந்தையொன்றை பிரசவித்துள்ளார்.

சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்ட குழந்தை மற்றும் தாய் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.