வாள்வெட்டுக்குழுக்களின் முக்கிய உறுப்பினர்கள் தென்னிலங்கையை நோக்கி தப்பி ஓட்டம் !!

வாள்வெட்டுக்குழுக்களின் முக்கிய உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து தென்னிலங்கையை நோக்கி தப்பி ஓடியுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு தீவர தேடுதல் வேட்டை இடம்பெறுகின்றது.

அத்துடன் பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் கைது நடவடிக்கைகளும் தீவரமாக இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குழுக்களின் முக்கிய தலைவர்கள் தென்னிலங்கையை நோக்கி தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் ஆவா குழுவின் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் நால்வர் கொழும்பு புறக்கோட்டை மற்றும் மட்டக்குளி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த சில நாட்களாக யாழ். குடாநாட்டில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 100 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.