கண்டி ஹோட்டல் அறையில் பெரும் துன்பமாக்கிய காதல்

கண்டி வரகாபொல என்ற இடத்தில் மூத்த பெண் ஒருவருக்கும், இளைய ஆண் ஒருவருக்கும் பஸ்ஸில் ஏற்பட்ட காதல் விபரீதமாக முடிந்துள்ளது. இவர்கள் இருவரினதும் வயது முறையே 49 மற்றும் 31 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பில் தனியார் நிறுவனமொன்றில் கடமையாற்றி வரும் இளம் தோற்றமுடைய 49 வயதான குறித்த பெண், அனுராதபுரத்தில் அமைந்துள்ள தமது வீட்டுக்கு செல்வதற்காக பஸ்ஸில் ஏறியுள்ளார்.

அவருக்கு அருகாமையில் அமர்ந்த, 31 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையான அந்த ஆண் குறித்த பெண்ணுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

தான் வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களை வழங்கும் நிறுவனமொன்றில் கடமையாற்றி வருவதாகவும் குறித்த பெண்ணுக்கு ஒன்றரை லட்சம் ரூபா சம்பளம் பெற்றுக்கொள்ளக்கூடிய வெளிநாட்டு தொழில் வாய்ப்பு ஒன்றினைப் பெற்றுக்கொடுக்க முடியும் என்றும் அவர் பெண்ணிடம் கூறியுள்ளார்.

தொலைபேசி இலக்கங்களை பரிமாறிக் கொண்ட பின்னர், குறித்த பெண்ணை வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஒன்று பற்றி பேசுவதற்காக வரகாபொலவிற்கு வருமாறு குறித்த நபர் அழைத்துள்ளார்.

இதன்படி அவ்விருவரும் பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியுள்ளனர். குளியலறையில் பெண் குளித்துக்கொண்டிருந்தபோது வங்கிக்கு அவசரமாக செல்ல வேண்டுமெனக் கூறி குறித்த நபர் தாம் தங்கியிருந்த அறையை விட்டு வெளியேறிச் சென்றுள்ளார்.

வெளியே சென்ற நபர் நீண்ட நேரமாகியும் திரும்பாததால் சந்தேகமுற்ற பெண், தனது பையை சோதனையிட்டுள்ளார். அப்போதுதான் தனது பையிலிருது லட்சம் பெறுமதியான தங்க நகை திருடு போயுள்ள சம்பவம் தெரியவந்தது கண்டு அதிர்ச்சியில் உறைந்தார்.

இதனால் தங்கியிருந்த ஹோட்டலுக்கு பணம் செலுத்துவதற்கு வழியற்று கையில் இருந்த மோதிரத்தை கழற்றிக் கொடுத்துவிட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கேற்ப அதே நபருக்கு இன்னொரு பெண் போல அழைப்பை எடுத்து நட்பை ஏற்படுத்திக்கொண்டு அதே பாணியில் வரவழைத்து பொலிஸாரிடம் பிடித்துக் கொடுத்துள்ளார்.