பிஞ்சு குழந்தைக்கு தன்னுயிரை கொடுத்து உலகை விட்டு பிரிந்த 'நிலூகா'

பெண் குழந்தையொன்றை பிரசவித்த இளம் தாயொருவர் சில மணித்தியாலங்களின் பின்னர் உயிரிழந்த சம்பவமொன்று மாத்தறை , மாகந்துர பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

மாத்தறை , மாகந்துர - தலஹகம பிரதேசத்தை சேர்ந்த நிலூகா என்ற 27 வயதுடைய தாயொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 06ம் திகதி பிரசவத்திற்காக குறித்த பெண் கம்புருபிடிய - ஆதபான அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் அவர் மாத்தறை பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் , அங்கு அவருக்கு பெண் குழந்தையொன்று பிறந்துள்ளது.

எனினும் ,குழந்தை பிறந்த 4 மணி நேரத்தின் பின்னர் இந்த இளம் தாய் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரை காப்பாற்றுவதற்காக சிறப்பு மருத்துவ குழுவினர் கடுமையாக முயற்சித்துள்ள போதும் அது வெற்றியளிக்கவில்லை.

சம்பவம் தொடர்பில் , காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குழந்தை தற்போதைய நிலையில் மாத்தறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் , குழந்தை நலமுடன் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.