குழப்பத்துக்கு முதலமைச்சரே முழுக் காரணம்

வடக்கு மாகாண சபை­யில் தற்­போது ஏற்­பட்­டுள்ள குழப்­பத்­துக்கு முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரனே முழுக் கார­ணம் என்று, அவ­ருக்கு அனுப்பி வைத்­துள்ள கடி­தத்­தில் மீன்­பிடி மற்­றும் போக்­கு­வ­ரத்­துத் துறை அமைச்­சர் பா.டெனீஸ்­வ­ரன் குற்­றஞ்­சாட்­டி­யுள்­ளார்.

ஊழல் விசா­ரணை தொடர்­பில் முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் கடந்த 2ஆம் திகதி அமைச்­சர்­க­ளான ப.சத்­தி­ய­லிங்­கம், பா.டெனீஸ்­வ­ரன் ஆகி­யோ­ருக்கு கடி­தம் அனுப்­பி­யி­ருந்­தார். அந்­தக் கடி­தத்­துக்­குப் பதில­ளித்து அமைச்­சர் பா.டெனீஸ்­வ­ரன் நேற்று கடி­தம் அனுப்­பி­யி­ருந்­தார்.

அந்­தக் கடி­தத்­தில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

முன்­னாள் விவ­சாய அமைச்­ச­ருக்கு எதி­ராக ஊழல் முறைப்­பாடு முன்­வைக்­கப்­பட்­டது. அதன் பின்­னர் நீங்­கள் ஏனைய நான்கு அமைச்­சர்­க­ளுக்கு எதி­ரா­க­வும் எழுத்து மூல­மான முறைப்­பாடு கிடைக்­கப் பெற்­றுள்­ள­தா­க­வும், அதன் உண்­மைத்­தன்­மை­யினை கண்­ட­றிய விசா­ர­ணைக்­குழு நிய­மிக்­கப்­போ­வ­தா­க­வும் மாகாண சபை­யில் அறி­வித்­தி­ருந்­தீர்­கள்.

அந்த விசா­ர­ணைக் குழுவை விரை­வாக நிய­மிக்­கு­மா­றும், இத்­தனை இழப்­பு­க­ளுக்­குப் பின்­னர் கிடைக்­கப்­பெற்ற மாகா­ண­ச­பை­யில் ஊழல் இருக்­கக்­கூ­டாது என­வும், அவ்­வாறு எவ­ரா­வது செயற்­பட்­டி­ருந்­தால் அத­னைக் கண்­ட­றிந்து உட­ன­டி­யாக நட­வ­டிக்கை மேற்­கொள்ள வேண்­டு­மெ­ன­வும் தெரி­வித்­தி­ருந்­தேன்.

தங்­க­ளி­னால் நிய­மிக்­கப்­பட்ட விசா­ர­ணைக்­கு­ழு­வின் பரிந்­து­ரை­க­ளின்­படி செயற்­ப­டா­மல், இரு அமைச்­சர்­களை ஒரு மாத கட்­டாய விடு­மு­றை­யில் செல்­லு­மாறு நீங்­கள் தெரி­வித்­தி­ருந்­த­மையே இத்­தனை பிரச்­சி­னை­க­ளுக்­கும் அடிப்­ப­டைக் கார­ண­மாக அமைந்­துள்­ளது என்­பதை எவ­ரும் மறுக்­கவோ மறைக்­கவோ முடி­யாது.

தங்­க­ளுக்­கும் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­மந்­த­னுக்­கும் இடை­யில் ஏற்­பட்ட கருத்து ஒரு­மைப்­பாட்­டின் அடிப்­ப­டை­யில் ஒரு­மாத கட்­டாய விடு­மு­றையை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தில்லை என்­றும் உங்­க­ளுக்­கெ­தி­ராக கொண்­டு­வ­ரப்­பட்ட நம்­பிக்­கை­யில்­லாத் தீர்­மா­னத்­தைக் கைவி­டு­வது என்­றும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

இரு அமைச்­சர்­க­ளுக்கு எதி­ரா­க­வும் தேவை ஏற்­ப­டின் புதிய விசா­ர­ணை­க­ளை­யும் மேற்­கொள்­வ­தற்கு சுயா­தீ­ன­மா­ன­தும் சட்­ட­ரீ­தி­யா­ன­து­மான விசா­ர­ணைக் குழுவை நிய­மிப்­ப­தென்­றும், அதற்கு இரு அமைச்­சர்­க­ளும் தங்­க­ளது ஒத்­து­ழைப்பை வழங்­க­வேன்­டு­மென்­ப­தும் கருத்­த­ள­வில் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட விட­யங்­க­ளா­கும்.

எந்­தச் சந்­தர்ப்­பத்­தி­லும் சட்­ட­ரீ­தி­யா­ன­தும் சுயா­தீ­ன­மா­ன­து­மான விசா­ர­ணைக்­குழு முன் தோன்­று­வ­தற்கு நான் ஒரு துளி­யே­னும் தயங்­கப்­போ­வ­தில்லை.

அவ்­வாறு விசா­ர­ணை­யின்­போது நிதி மோச­டி­கள் உறு­திப்­ப­டுத்­தப்­ப­டு­மெ­னில் அதனை இரண்டு மடங்­காக திருப்­பித்­த­ரு­வ­தற்­கும் தயா­ரா­க­வுள்­ளேன்.

என்­னி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்ட அமைச்­சுப் பொறுப்பை இன்­று­வரை எந்­த­வித களங்­க­மும், மோச­டி­யு­மின்றி தங்­க­ளின் நம்­பிக்­கைக்கு பாத்­தி­ர­மா­க­வும் எமது மக்­க­ளுக்கு விசு­வா­ச­மா­க­வும் பேணிப்­பா­து­காத்து வரு­கின்­றேன்.

எனது அமைச்­சுச் சார்ந்த வேலைத்­திட்­டங்­கள் அன்­றி­லி­ருந்து இன்­று­வரை இன, மத, மொழி வேறு­பா­டின்றி முழு­வீச்­சோடு நடை­பெற்று வரு­கின்­றனு.

எவ­ரே­னும் என்­மீது அர­சி­யல் காழ்ப்­பு­ணர்ச்­சி­யோடு தங்­க­ளி­டம் ஏதா­வது கூறி­யி­ருந்­தால், அதன் உண்­மைத் தன்­மை­யைக் கண்­ட­றிய தாங்­கள் விரும்­பி­னால், எந்­தச் சந்­தர்ப்­பத்­தி­லும் அத­னைத் தெளி­வு­ப­டுத்­து­வ­தற்­கும் தயா­ராக உள்­ளேன் – என்­றுள்­ளது.