ரவியை தொடர்ந்து பதவி விலகுவாரா விஜயதாச ராஜபக்ச?

ஸ்ரீலங்காவின் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவிற்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை ஒன்று கொண்டுவரப்படவுள்ளது.

இந்த நம்பிக்கை இல்லா பிரேரணையை ஐக்கிய தேசிய கட்சி கொண்டுவர தீர்மானித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சியின் 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது விஜயதாச ராஜபக்சவிற்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை ஒன்றை கொண்டுவருவதற்கு கையெப்பம் திரட்டும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், நம்பிக்கை இல்லா பிரேரணை ஒன்றை கொண்டுவருவது தொடர்பாக இன்று இறுதி முடிவெடுக்கப்பட்டு அடுத்த கட்ட செயற்பாடுகளுக்கு நகரவும் ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது.

இவ்வாறாயினும் ஸ்ரீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்விற்கு எதிராக கூட்டு எதிரணியினரால் நம்பிக்கை இல்லா பிரேரணை ஒன்று கொண்டுவரப்பட்டு ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட அவர் நேற்று பதவி விலகியுள்ள நிலையில், நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவிற்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை ஒன்று கொண்டுவர ஐக்கிய தேசிய கட்சியினர் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.