பிக்பாஸ் போட்டியாளர்கள் தொடர்பில் ஆர்த்தி வெளியிட்டுள்ள பரபரப்பு தகவல்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நகைச்சுவை நடிகை ஆர்த்தி, பிக் பாஸ் வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்கள் எப்படி பட்டவர்கள் என்பதை கூறியுள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் சென்றதும் நான் ஜூலி தனிமையை உணரக்கூடாது என்பதற்காக அவரை கட்டிப்பிடித்தேன். ஆனால் ஜூலி ஸ்ரீPயிடம் தன்னை கட்டிபிடிக்க யாருமே இல்லை என கூறுகிறார்.

அதிலிருந்தே புரிந்து விட்டது ஜூலி எப்படிப்பட்டவர் என்று. ஜூலி என்னிடம் நேரில் ஒரு மாதிரியாகவும் எனக்கு பின்னாடி இன்னொரு மாதிரியாகவும் பேசினார்.

பிக்பாஸ் வீட்டில் உள்ள ஷக்திக்கு தான் பெரிய ஹீரோங்ற நினைப்பு இருக்கு. பிக் பாஸ் பங்கேற்பாளர்களில் எனக்கு பிடித்தவர் ஓவியாதான்.

அவர் அன்புக்காக ஏங்கக்கூடியவர். பிக் பாஸ் வீட்டில் உள்ளேயும், வெளியேயும் துணிச்சலாக இயங்குபவர் ஓவியா.

பிந்து மாதவி அமைதியானவர், எளிமையானவர். ஓவியா, பிந்து மாதவி இவர்கள் இருவரையும் தவிர மற்ற அனைவருமே சுயநலவாதிகள் என ஆர்த்தி கூறியுள்ளார்.