நுவரெலியாவில் அம்மனை தரிசித்த இந்திய வீரர்கள்

நுவரெலியா சீதா எலியவில் அமைந்துள்ள ஸ்ரீ சீதா, ஸ்ரீ இராமசந்திர மூர்த்தி, ஸ்ரீ ஆஞ்சிநேய சுவாமி ஆலயத்தை இந்திய கிரிக்கற் வீரர்கள் பார்வையிட்டுள்ளனர்.

இந்திய கிரிக்கற் வீரர்கள் குறித்த ஆலயங்களை பார்வையிட்டதுடன் வழிபாடுகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

இராணுவணனினால் கடத்தி வரப்பட்ட சீதை குறித்த இடத்தில் சிறைப்பிடிக்கப்பட்டிருந்தாக இராமாயாணம் தெரிவிக்கின்றது.

இந்நிலையில் ஸ்ரீலங்காவிற்கு கிறிக்கற் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி வீர்கள் ஸ்ரீ சீதா, ஸ்ரீ இராமசந்திர மூர்த்தி, ஸ்ரீ ஆஞ்சிநேய சுவாமி ஆலயத்தை பார்வையிட்டுள்ளனர்.

இது தொடர்பான படங்களை இந்திய வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் சாமி தனது ரூவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.