அவதானம்!! இலங்கையில் விரைவில் அமுலுக்கு வருகின்றது ஆபத்தான சட்டம்

ஸ்ரீலங்காவில் போக்குவரத்துச் சட்டத்தை மீறுவோருக்கான தண்டப்பணத்தில் விரைவில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட உள்ளது.

குறிப்பாக 5 விதிமுறைகளை மீறுவோருக்கு 25000 ரூபா தண்டப்பணம் அறவிடப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த போதும், இதற்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வெளிவந்துகொண்டிருந்தன. எனினும் தற்போது 25000 ரூபாவையும் தாண்டி 30000 ரூபா தண்டப்பணம் அறவிடப்படவுள்ளது.

அந்த வகையில் குறிப்பிட்ட வயதுக்குக் குறைந்த ஒருவரினால் வாகனம் செலுத்தப்பட்டால் அதற்கு தண்டப்பணமாக 5000 ரூபா அறவிடப்படவுள்ளது.

ஆனால் இக்குற்றத்துக்காக தற்போது காணப்படுகின்ற குறைந்தபட்ச தண்டப்பணத்தினை 5000 ரூபாவிலிருந்து 30000 வரை அதிகரிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டு அதற்கு அமைச்சரவை அங்கீகாரமும் வழங்கியுள்ளது.