நல்லூர் ஆலயத்தில் இன்று நடந்த பரிதாபம்!! தீயில் தவறி விழுந்த பெண்

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் முன்வீதியில் ஏற்பட்ட விபத்தில் பெண்ணொருவர் படுகாயமடைந்து யாழ்ப்பானம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடத்துள்ளது.

மேற்படி ஆலயத்தின் முன்வீதியில் கற்பூரம் ஏற்றப்படும் தீக்குண்டப் பகுதியில் குறித்த பெண் கற்பூரம் கொளுத்த முற்பட்டபோது தீக்குள் தவறி விழுந்துள்ளார். உடனடியாக அருகில் நின்ற மக்களால் காப்பாற்றப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று இரவு 7.30 மணியளவில் நடந்துள்ளது. காயமடைந்தவர் 51 வயதுடையவர் என்று கூறப்படும் அதே நேரம் இவரது முகத்திலும் கையிலும் தீக்காயங்கள் ஏற்பட்டதாக சொல்லப்படுகின்றது.

இதேவேளை நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெரும் திருவிழாக் காலமான இந்த நாட்களில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஆலயத்தில் குழுமுகின்றமை இங்கே சுட்டிக்காட்டத்தக்கதாகும்.