வடக்கில் மீண்டும் இரா­ணுவம்

புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான செயற்­பா­டுகள் ஆமை வேகத்­தினை அடைந்­தி­ருப்­ப­தாக சபையில் சுட்­டிக்­காட்­டிய தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­ஞானம் சிறி­தரன் வடக்கில் மீண்டும் இரா­ணு­வப்­ப­தி­வுகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் குறிப்­பிட்டார்

பாரா­ளு­மன்­றத்தில் வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற இலங்கை மத்­திய வங்­கியின் 2016ஆம் ஆண்­டுக்­கான ஆண்­ட­றிக்கை குறித்த சபை ஒத்­தி­வைப்பு வேளை விவாதத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

ஊழல் மோச­டிகள் குறித்து தற்­போது பேசப்­ப­டு­கின்­றது. கடந்த ஆட்­சி­யாளர் தற்­போ­துள்­ள­வர்­க­ளையும், தற்­போ­தைய ஆட்­சி­யா­ளர்கள் கடந்த ஆட்­சி­யா­ளர்­க­ளையும் சுட்­டிக்­காட்டும் படலம் தொடர்ந்­த­வண்­ண­முள்­ளது. புதிய ஆட்­சியில் மிகவும் மோச­மான ஒரு செயற்­ப­ாடாக கரு­தப்­படும் பிணை முறிகள் விற்­பனை குறித்து குற்­றச்­சாட்­டுக்­களில் அமைச்சர் இரா­ஜி­னா­மாவும் செய்­தி­ருக்­கின்றார்.

இவ்­வா­றான விட­யங்கள் பேசப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கையில் இந்த நாட்டின் ஒரு தேசிய இனத்­திற்கு காணப்­படும் பிரச்­சி­னைகள் பரா­மு­க­மாக தொடரும் நிலை­மையே நீடித்­துக்­கொண்­டி­ருக்­கின்ற அவ­லத்­தினை யாரும் ஏன் கருத்தில் கொள்­ளா­தி­ருக்­கின்­றார்கள் என்­பதே எனது கேள்­வி­யாகும்.

எத்­த­னையோ தட­வைகள் நாம் இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு தொடர்­பாக இந்த சபையில் குறிப்­பிட்­டுள்ளோம். அதனை விடவும் அத்­தி­யா­வ­சி­ய­மாக அந்த மக்­க­ளுக்கு அவ­சி­ய­மாக காணப்­ப­டு­கின்ற பல்­வேறு விட­யங்­க­ளையும் முன்­வைத்­துள்ளோம். ஆனால் எதற்­குமே பதிலைக் காண­வில்லை.

புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­ப­டு­கின்­றது. அதன் ஊடாக பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு எட்­டப்­படும் என்ற எதிர்­பார்ப்பு எமது மக்­க­ளுக்கு காணப்­பட்­டது.ஆனால் கடந்த காலத்தில் மிகவும் தீவி­ர­மாக முன்­னெ­டுக்­கப்­பட்­ட­வொரு விட­ய­மாக காணப்­பட்ட அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்­கு­வ­தற்­கான செயற்­பா­டுகள் தற்­போது ஆமை வேகத்­தினை அடைந்­தி­ருக்­கின்­ற­மையை அவ­தா­னிக்க முடி­கின்­றது.

ஏனைய விட­யங்கள் தொடர்பில் அர­சாங்கம் காட்டும் ஆர்­வத்­தினை தற்­போது அர­சி­ய­ல­மைப்பு விட­யத்தில் காட்­டாது இருக்­கின்­றமை ஐயப்­பாட்­டினை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது.

இவ்­வாறு நிலை­மைகள் காணப்­ப­டு­கின்ற அதே­நேரம் வடக்கில் மீண்டும் இரா­ணு­வத்­தினர் சுற்றி வளைப்­புக்­களைச் செய்யும் செயற்­பா­டு­களும் மக்­களை பதிவு செய்­கின்ற செயற்­பா­டு­களும் ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.

கிளி­நொச்­சியில் பல்­ல­வ­ராயன் கட்டு உள்­ளிட்ட பகு­தி­களில் இவ்­வா­றான இரா­ணு­வப்­ப­திவு ஆரம்­ப­மா­கி­யுள்­ளது. வடக்கின் ஏனைய பகு­தி­க­ளிலும் இவ்­வா­றான நிலை­மைகள் காணப்­ப­டு­கின்­றன.

எமது மக்கள் அர­சாங்­கத்­திடம் பெரி­தாக எத­னையும் எதிர்­பார்க்­க­வில்லை. அவர்கள் தமக்­கான வாழ்­வா­தார வச­தி­களை கோரு­கின்­றார்கள்.

நியா­ய­மான தீர்வைக் கோரு­கின்­றார்கள். காணாமல் போன தமது சொந்­தங்­க­ளுக்கு என்ன நடந்­தது என்று கோரு­கின்­றார்கள். அவற்­றினை அர­சாங்கம் மேற்­கொள்ள முடி­யா­தி­ருப்­பது ஏன்?

அண்­மையில் இலங்­கைக்கு வருகை தந்­தி­ருந்த ஐ.நா நிபுணர் ஊடக சந்­திப்பை நடத்­தி­யி­ருந்தார். அதிலே அவர் சில விட­யங்­களை குறிப்­பிட்­டி­ருந்தார். அவை தொடர்பில் வீர­கே­சரி பத்­தி­ரி­கையில் தலைப்­புச்­செய்தி பிர­சு­ரிக்­கப்­பட்­டி­ருந்­தது.

குறிப்­பாக காணா­மல் ­போ­ன­வர்கள், சிறைச்­சா­லை­களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றவர்கள், திருமலையில் உள்ள நிலக்கீழ் முகாமில் நடைபெற்ற விடயம் ஆகியவை தொடர்பில் உண்மைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

ஆகவே சர்வதேசமும் எமது மக்கள் கோரும் விடயங்களின் நியாயப்பாட்டினை உணர்ந்துள்ளது. அரசாங்கம் அது குறித்து வெளிப்படைத் தன்மையுடன் பதிலளிக்க கடமைப்பட்டிருக்கின்ற பொறுப்பை உணர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.