நீர்கொழும்பில் விஷேட அதிரடிப்படையினருக்கும் ஆயுதக்குழுவுக்கும் இடையில் துப்பாக்கி பிரயோகம்

நீர்கொழும்பில் விஷேட அதிரடிப்படையினருக்கும் ஆயுதக்குழுவுக்கும் இடையில் துப்பாக்கி பிரயோகம்

நீர்கொழும்பில் விசேட அதிரடிப்படையினரின் வாகனம் மீது துப்பாக்கி சூட்டு சம்பவம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நீர் கொழும்பு குறன என்ற பகுதியில் வைத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேனில் வந்த இனந்தெரியாத குழுவினர் விஷேட அதிரடிப்படையினரின் வாகனத்தின் மீது துப்பாக்கி சூட்டு பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

நீர்கொழும்பு - குரண பிரதேசத்தில் விசேட அதிரடிப்படை மீது இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று மாலை ஐந்தரை மணியளவில் நடைபெற்ற இச்சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்ட குழுவில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான காரணங்கள் இது வரையில் தெரியவராத நிலையில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்தப் பகுதியில் பொலிஸாரும், அதிரடிப் படையினரும் தற்போது குவிக்கப்பட்டுள்ளனர். அந்தப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.