இலங்கையில் குழந்தைகளை காப்பாற்றிய இந்திய வைத்தியர்களின் மனிதாபிமானம்..!

எலும்பு மச்சை நோயினால் பாதிப்படைந்திருந்த நான்கு ஸ்ரீலங்கா குழந்தைகள், சத்திரச் சிகிச்சை மூலம் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இந்தியா பெங்களுர் மருத்துவமனையில் இந்த அயல் உறுப்பு பொருத்தல் சிகிச்சை வெற்றியளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா குழந்தைகளின் உறவினர்களின் உறுப்பு பொருந்தாத போதிலும், உறவு முறையற்ற வெளியார்களின் உறுப்புக்கள் பொருந்தியதன் காரணமாக இந்த சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளதாக மருத்துவர் சுனில் பாத் தெரிவித்துள்ளார்.

சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட குழந்தைகள், நான்கு, ஐந்து, பத்து மற்றும் 15 மாத வயதைக் கொண்டவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.