மஹிந்த ராஜபக்ச சி.ஐ.டிக்கு திடீர் விஜயம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று காலை குற்றவியல் விசாரணைப் பிரிவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக அவரது குடும்ப வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

ஷிரந்தி ராஜபக்சவுக்கு இன்றைய தினம் குற்றவியல் விசாரணைப் பிரிவு அழைப்பு விடுத்திருக்கின்ற நிலையில் அவர் இன்று முற்பகல் முன்னிலையாகவுள்ளார்.

பிரபல ரக்பீ வீரர் வசீம் தாஜுடீனின் படுகொலை தொடர்பாகவே ஷிரந்தியிடம் வாக்மூலம் பதிவு செய்யப்படவுள்ளது.

எனவே மனைவியிடம் இன்று விசாரணை செய்யப்படவுள்ள நிலையில் அவரது பாதுகாப்பிற்காக மஹிந்த ராஜபக்சவும் குற்றவியல் விசாரணைப் பிரிவுக்கு இன்று செல்கின்றார்.