நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை! இன்றுமுதல் அமுலுக்கு வரும் புதிய நடைமுறை..

போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்களை செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கும் சட்டம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

சாரதி அனுமதிப் பத்திரம் இன்றி வாகனம் செலுத்துதல், அங்கீகரிக்கப்பட்ட காப்புறுதி இன்மை, சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாதவரை சாரதியாக பணிக்கு அமர்த்துதல், மதுபோதையில் வாகனம் செலுத்துதல் மற்றும் தொடருந்து கடவைகளில் ஒழுங்கற்ற முறையில் வாகனத்தை செலுத்தல் ஆகிய குற்றங்களுக்கு எதிராக இந்த அபராதம் விதிக்கப்படவுள்ளது.

குறிப்பாக 5 விதிமுறைகளை மீறுவோருக்கு 25000 ரூபா தண்டப்பணம் அறவிடப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த போதும், இதற்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வெளிவந்துகொண்டிருந்தன. எனினும் தற்போது 25000 ரூபாவையும் தாண்டி 30000 ரூபா தண்டப்பணம் அறவிடப்படவுள்ளது.

அந்த வகையில் குறிப்பிட்ட வயதுக்குக் குறைந்த ஒருவரினால் வாகனம் செலுத்தப்பட்டால் அதற்கு தண்டப்பணமாக 5000 ரூபா அறவிடப்படவுள்ளது.

ஆனால் இக்குற்றத்துக்காக தற்போது காணப்படுகின்ற குறைந்தபட்ச தண்டப்பணத்தினை 5000 ரூபாவிலிருந்து 30000 வரை அதிகரிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டு அதற்கு அமைச்சரவை அங்கீகாரமும் வழங்கியுள்ளது.