பொலிஸாருக்கு உதவியது இதுவா?

நுவரெலியா - ஹட்டன் பிரதேசத்தில் வர்த்தக நிலையமொன்றை உடைத்து கொள்ளையிட்டதாக சந்தேகிக்கப்படும் நபரொருவர் நாவலப்பிட்டி பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை சீ.சீ.டி.வி கெமராவின் உதவியுடன் கைதுசெய்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நுவரெலியா - ஹட்டன நகரில் கடந்த 14ஆம் திகதி இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாவலப்பிட்டி பிரதேசத்தில் நேற்று கைது செய்யப்பட்ட குறித்த நபரிடமிருந்து 10 ஆயிரம் ரூபா பணமும், கைத்தொலைப்பேசி மீள் நிரப்பு அட்டைகள் ஒரு தொகையும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதான சந்தேகநபரை இன்றைய தினம் ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக தெரிவித்த ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.