இப்படியும் ஒரு திருடனா? படித்தால் அதிர்ச்சி அடைவீர்கள்..

கேரளாவில் வீட்டில் திருடிய பொருட்கள் அனைத்தையும் அப்படியே கொண்டுவந்து வைத்துவிட்டு கடிதம் ஒன்றையும் அதில் வைத்துவிட்டு சென்றுள்ளான் திருடன் ஒருவன்.

திருவனந்தபுரத்தில் வீடு ஒன்றில் உள்ள விலை உயர்ந்த பொருட்களை திருடன் ஒருவன் திருடிச் சென்றுள்ளான்.

இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் பொலிசில் புகார் அளித்துள்ளதுடன் தனது வீட்டில் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகளையும் அளித்துள்ளார்.

அந்த வீடியோ காட்சியை ஒருவர் தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார், இதனைப்பார்த்த திருடன் தான் திருடிய பொருட்கள் அனைத்தையும் மீண்டும் அவ் வீட்டில் வைத்துவிட்டு இரத்தத்தால் எழுதப்பட்ட கடிதத்தையும் அதில் வைத்துள்ளான்.

அந்த கடிதத்தில் நான் ஒரு மாணவன், என்னை மன்னித்துவிடுங்கள், தயவுசெய்து அந்த வீடியோவை நீக்கிவிடுமாறு பொலிசாரிடம் கூறுங்கள்.

இல்லையெனில் நிலுவையில் உள்ள அத்தனை வழக்குகளையும் என் மீது போட்டு விடுவார்கள். அந்த பதட்டமே என்னை கொன்று விடும் என்றும் அக் கடிதத்தில் தெரிவித்துள்ளான்.

இருப்பினும் இந்த திருடனை பொலிசார் கண்டுபிடித்துவிட்டனரா என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.