பொலனறுவைக்கு வந்த வெள்ளை மான்

பொலனறுவை – மெதிரிகிரிய யொதகனாவ எனும் பகுதியில் அரிய வகை மானொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பால் போன்ற வெள்ளை நிறத்தில் காணப்படும் குறித்த மான், காண்பதற்கு மிகவும் அரிதானது. இலட்சங்களில் ஒன்றே இவ்வாறான அமைப்பில் பிறக்குமென தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பகுதியில் வாழ்பவர்களால் இன்றைய தினம் கண்டுபிடிக்கப்பட்ட இந்த மானை ஊர் மக்கள் திரண்டு ஆச்சரியத்துடன் பார்த்து வந்துள்ளனர்.

தற்போது மஹிந்தலை மிருகக் காட்சி சாலைக்கு இந்த மான் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.