இலங்கையில் வாகன சாரதிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் பொலிஸார்..!

கடந்த 15 ஆம் திகதி முதல் கண்டி நகரில் போக்குவரத்து விதிமுறைகளை மதித்து சிறப்பாக வாகனம் ஓட்டும் சாரதிகளை அடையாளப்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்காக கண்டி நகரின் பல இடங்களில் 5 பொலிஸ் குழுகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

அவ்வாறு பொலிஸாரால் அடையாளம் காணப்படும் சாரதிகளின் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒன்று ஒட்டுவதோடு AMW நிறுவனத்தின் உதவியுடன் 3000 ரூபாய் பரிசு ஒன்று வழங்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய கடந்த 15ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வில் அவ்வாறு அடையாளம் காணப்பட்ட 44 சாரதிகளுக்கு இந்த பணப்பரிசு வழங்கப்பட்டுள்ளதுடன் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.