மைத்திரி - ரணில் விரைவில் முக்கிய அறிவிப்பு

உள்­ளூராட்­சி­மன்ற மற்றும் மாகாண சபை தேர்­தல்கள் தொடர்பில் தேசிய அர­சாங்கம் முக்­கிய இரண்டு தீர்­மா­னங்­களை எடுத்­துள்­ளது. அனைத்து மாகாண சபை­க­ளுக்­கு­மான தேர்­தல்­களை இனி வரும் காலங்­களில் ஒரே திக­தியில் வைப்­ப­தற்கும் வருட இறு­திக்குள் உள்­ளூராட்­சி­மன்ற தேர்­தலை தொகு­தி­வாரி முறை­மையின் கீழ் நடத்­தவும் தேசிய அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது.

ஜனா­தி­பதி, பிர­தமர் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ராட்­சி­மன்ற அமைச்சர் உள்­ளிட்ட தேர்தல் அதி­கா­ரி­க­ளுக்கு இடையில் இடம்­பெற்ற முக்­கிய சந்­திப்பின் பின்­னரே இந்த தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது.

அர­சி­ய­ல­மைப்பின் 20 ஆவது திருத்­தத்­திற்கு அமை­வாக அனைத்து மாகாண சபை தேர்­தல்­க­ளையும் ஒரே நாளில் நடத்­து­வ­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது. தேர்­த­லுக்­கான உரிய திக­தி மிக விரைவில் அறி­விக்­கப்­பட உள்­ளது.

சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய உள்­ளிட்ட ஆணைக்­குழு அதி­கா­ரிகள் தெரி­வித்த கருத்­துக்கள் மற்றும் சந்­திப்­பு­களை அடுத்தே இந்த தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது. உரிய திக­தியை உறு­திப்­ப­டுத்தி அனைத்து மாகாண சபை­க­ளுக்­குமான தேர்­தல்­க­ளையும் ஒரே நாளில் வைப்­ப­தற்கு ஆணைக்­குழு எவ்­வி­த­மான எதிர்ப்­பையும் வெளியிட வில்லை.

அர­சி­ய­ல­மைப்பில் இதற்­காக காணப்­ப­டு­கின்ற சந்­தர்ப்­பத்தை தெளிவு­ப­டுத்தி சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­குழு அர­சாங்­கத்­திற்கு அறி­வித்­துள்­ளது. இத­ன­டிப்­ப­டையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கிர­ம­சிங்க ஆகியோர் இந்த விடயம் தொடர்பில் கவ­னத்தில் கொண்டு உரிய திக­தியை மிக விரைவில் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­விற்கு அறி­விக்க உள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

இதேவேளை, மாந­கர சபை மற்றும் நகர சபை உள்­ளிட்ட அனைத்து உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் தேர்­தல்­க­ளையும் வருட இறு­திக்குள் நடத்­து­வ­தற்கு அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்­ளூராட்­சி­மன்ற அமைச்சர் பைஸர் முஸ்­தபா உள்­ளிட்ட தேர்­தல்கள் செயலக அதி­கா­ரி­க­ளுக்கு இடையில் இடம்­பெற்ற சந்­திப்பின் பின்­னரே இந்த தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது.

இத­ன­டிப்­ப­டையில் 23 மாந­கர சபைகள், 41 நகர சபைகள் மற்றும் 271 பிர­தேச சபைகள் என மொத்­த­மாக 335 உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­க­ளுக்­கான தேர்தல் இடம்­பெ­ற­வுள்­ளது. நல்­லாட்சி அர­சாங்கம் அறி­முகம் செய்த தொகு­தி­வாரி முறைமையில் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேசிய அரசாங்

கத்தின் வரவு–செலவு-- திட்டம் முன் வைக்கப்பட்டதன் பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக் கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.