நல்லூர் கந்தனின் வளாகத்தில் அதிசயம்!! இலட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் தேர்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் ரதோற்சவம் இன்று காலை 7.00 மணியளவில் தொடங்கி தற்போது நடைபெற்று வருகின்றது.

இந்த தேர் திருவிழாவில் இலங்கையில் நாலாபுறங்களிலும் இருந்து வந்துள்ள லட்சோபலட்சக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அந்தணர்களின் வேத முழக்க ஒலிகளும் பக்தர்களின் அரோஹரா சத்தங்களும் வானைப் பிளக்கின்றதாக உள்ளது.

ஏராளமான பக்தர்கள் முருகப்பெருமான் ஆரோகணித்திருக்கும் தேருக்குப் பின்னால் அங்கப் பிரதட்சணை செய்து தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுகின்ற காட்சி உள்ளத்தை உருக்குவதாக அமைந்துள்ளது.

அத்துடன் பக்தர்களின் காவடிகள் மற்றும் பறவைக் காவடிகள் என்பனவும் வந்த வண்ணமாகஉள்ளது.

வழமையைான நாட்களை விட அதிகளவான மக்கள் மற்றும் பல அதிசயங்களை மன்னள் உணர்ந்து கண்ணீருடன் கடவுளைளை வணங்கும் காட்சிகள் பலர் மனதையும் உருக்கும் விதமாக அமைந்துள்ளது.