மகிந்தவின் ஊரில் பரீட்சைக்கு தோற்ற இருந்த மாணவனுக்கு நேர்ந்த அவலம்..!

காட்டு யானைகளை விரட்டுவதற்காக பயன்படுத்தப்படும் வெடிபொருள் வெடித்ததில் இம்முறை புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்ற இருந்த மாணவர் ஒருவர் காயமடைந்து ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வௌ்ளவாய, யௌவனகுமாரபுர பிரதேசத்தைச் சேர்ந்த, குமாரபுர வித்தியாலயத்தில் கல்வி கற்கும் ருஷிர கேஷான் எனும் மாணவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்த குறித்த வெடிபொருளை வெடிக்கச் செய்ய முற்பட்ட போது மாணவரின் கைப்பகுதியில் காயம் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் கூறினார்.

வீட்டில் இருந்த குறித்த வெடிபொருளை வெடிக்கச் செய்த போது, அது பிள்ளையின் கையிலே தவறுதலாக வெடித்ததன் காரணமாக பிள்ளையின் கை காயமடைந்தது என்று பிள்ளையின் தந்தை கூறினார்.