சடலமாக மீட்கப்பட்டவர் யார் ? ஆரம்பமாகின்றன அதிரடி விசாரணைகள்

ஹட்டன் - எபோட்சிலி தோட்டம் புளோரண்ஸ் பிரிவில் பழைய மாட்டு தொழுவமொன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

65 வயதான இராமசாமி இராமஜெயம் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர் மிக தனது குடும்பத்துடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தனிமையில் வாழ்ந்து வந்ததாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.