வெளிநாடொன்றில் பெண்ணின் மீது காதல் கொண்ட இலங்கையருக்கு ஏற்பட்ட அவல நிலை!

இலங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவர் மலேசியாவில் இரு வேறுவிதமான குற்றச்சாட்டுகளுக்கு முகங்கொடுத்துள்ளார்.

திருமணமான பெண்ணுடன் காதல் கொண்டமையால் 31 வயதான சுவேதன் என்ற இலங்கை இளைஞன் சட்டரீதியான நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளார்.

காதல் கொண்ட பெண்ணின் கணவனுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தமை மற்றும் திருமணமான பெண்ணின் மீது ஈர்ப்பு கொண்டமை குற்றச்சாட்டுகளாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இலங்கையருக்கு எதிராக நேற்று முன்தினம் மலேசிய நீதிவான் Salamiah Salleh முன்னிலையில் குற்றம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில், குற்றம் சாட்டப்பட்டவர், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை புரிந்து கொள்ள தவறிவிட்டார். இதன் பின்னர் நீதிமன்ற மொழிபெயர்ப்பாளர் இருமுறை குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் வாசித்துள்ளார்.

தன்னால் ஈர்க்கப்பட்ட பெண்ணின் கணவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தமையே அவருக்கு எதிராக சுமத்தப்பட்ட முதல் குற்றச்சாட்டாகும்.

கடந்த 12ஆம் திகதி காலை 9.15 மணியளவில் இந்த அச்சுறுத்தலை அவர் விடுத்துள்ளார்.

தண்டனைக்குரிய 506ஆம் பிரிவின் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவருக்கு தண்டனை வழங்கப்பட்டால் அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது சிறைத் தண்டனையும் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்படும்.

இரண்டாவதாக, தவறான நோக்கத்துடன் திருமணமான பெண்ணை தன் மீது வசியப்படுத்தியமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.

குற்றவியல் தண்டனை 498ஆம் பிரிவின் கீழ் அதே இரண்டு வகையான தண்டனைகள் அவருக்கு விதிக்கப்படும்.

இந்த நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர் வெளிநாட்டவர் எனவும், அவர் விமானத்திற்கு ஆபத்தானவர் எனவும் அவருக்கு பிணை வழங்கக்கூடாதெனவும், பிரதி பொது வழக்கறிஞர் Mary Phoon Keat Mee தெரிவித்துள்ளார்.