இலங்கையின் மிகவும் நீளமான சுரங்க ரயில் பாதை அடுத்த வருடம் நிறைவு

மாத்தறை முதல் பெலியத்த வரையான 26 கிலோமீட்டர் ரயில் பாதையை அடுத்த வருடம் நடுப்பகுதியில் நிறைவு செய்வதாக மகாவலி அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

மாத்தறை - கதிர்காமம் ஆகிய பிரதேசங்களுக்கு இடையிலான ரயில் பாதையின் மாத்தறை - பெலியத்த வரையான முதல் கட்ட பாதை நிர்மாண பணிகளை கண்காணிக்க சென்றிருந்த அமைச்சர் இதனை தெரிவித்தார்.

நகுட்டிய பிரதேசத்தில் மக்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் நிர்மானிக்கப்பட்டுவரும் இப்பாதை இலங்கையின் மிகவும் நீளமான சுரங்க ரயில் பாதையாகும்.

ரயில் பாதை கட்டுமானத்திற்காக 229 ஏக்கர் காணி நிலங்கள் பொதுமக்களிடமிருந்து வாங்கப்பட்டுள்ளது. அவ் நிலங்களில் இவ்வளவு காலமாக வாழ்ந்த 1225 குடும்பங்களுக்கு அரசினால் 978 மில்லியன் ரூபா இழப்பீட்டுத் தொகையாக வழங்கியுள்ளமை விசேட அம்சமாகும்.