கட்டுநாயக்கவில் பிரான்ஸ் நாட்டு பொலிஸ் அதிகாரி கைது

தனது மகனுக்கு பரிசு வழங்குவதற்காக எருமை மாட்டின் மண்டை ஓடு மற்றும் கொம்புகளையும் சட்டவிரோதமாக கொண்டு செல்ல முயற்சித்த பிரானஸ் நாட்டவர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்க பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேக நபரின் பயண பை ஸ்கேன் இயந்திரம் ஊடாக பரிசோதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நபர் விமான நிலைய சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் பிரான்ஸ் நாட்டில் பிரதான உயர் பொலிஸ் அதிகாரியாக செயற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மகனின் கோரிக்கைக்கமைய இவற்றைக் கொண்டு செல்ல முயற்சித்துள்ளதாகவும், கொழும்பில் இருந்து நெருக்கமானவர் ஊடாக இவற்றைக் கொள்வனவு செய்துள்ளதாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக சுங்க பிரிவினர் தெரிவித்துள்ளனர்.