இலங்கையில் இப்படி ஒரு கொடூரம்!! சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண் துஷ்பிரயோகத்தின் பின்னர் கொடூரக் கொலை

இலங்கையின் கேகாலை மாவட்டம் கரவனெல்ல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட பெண், பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக விசேட நீதி விசாரணகளின்மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த பெண் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டதன் பின்னர், கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக, அவிசாவளை சட்டவைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.

மேற்படி கரவனெல்ல வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த குறித்த 70 வயதான பெண், சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போய் இருந்தார்.

பின்னர் அவரது சடலம் வைத்தியசாலையின் கழிவுக் குழி ஒன்றில் இருந்து மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.