விஜயதாசவை கைவிட்டார் மகிந்த

தமக்கும் விஜயதாச ராஜபக்ஷவிற்கும் இடையில் எந்த கொடுக்கல் வாங்கல்களும் இல்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

விஜயதாச ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ தரப்பினருடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டிருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து, அவரிடம் கேள்வி எழுப்பபட்டது.

இதில் பதில் வழங்கிய மஹிந்த ராஜபக்ஷ, தமக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலேயே கொடுக்கல் வாங்கல் இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

அதுபோல இதுவும் உண்மைக்கு புறம்பானது குற்றச்சாட்டு என்று குறிப்பிட்டுள்ளார்.