யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் காய்த்துக் குழுங்கும் பேரீச்சை மரம்

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் பேரீச்சை மரம் பூத்து காய்த்துள்ளது.

பாலைவனப் பகுதியில் விளைய கூடிய பேரீச்சை மரத்தை பணம் வரும் மரமாக மாற்றி வெற்றியடைந்திருக்கின்றனர் சாவகச்சேரி பகுதியை சேர்ந்த குடும்பத்தினர்.

அதிக வெப்பமான காலநிலையில் வளரும் பேரீச்சை மரம் 30 வருடங்களாக சாவகச்சேரி பகுதியின் வீடு ஒன்றில் பராமரித்து வந்த குடும்பத்திற்கு கடந்த மூன்று வருடங்களாக அதன் பலாபலன்களை தொடர்ச்சியாக பெறுகின்றனர்.

அத்துடன் இந்த மரங்கள் பூத்து காய்த்து நல்ல பழங்கள் கிடைப்பதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.