தமிழ்ப் பெண்ணுக்கு வாழ்வளித்த சிங்கள இளைஞன்..!

கிளிநொச்சியை சேர்ந்த 46 வயதான தமிழ்ப் பெண்ணுக்கு சிறுநீரகம் மாற்றீடு செய்யப்பட்ட சம்பவமொன்று கண்டி வைத்தியசாலையில் கடந்த திங்கட்கிழமை நடந்துள்ளது.

விபத்­தொன்­றில் சிக்கி மூளைச் சாவு நிலை­யி­லி­ருந்த 19 வயதான சிங்­கள இளை­ஞர் ஒரு­வ­ரின் சிறு­நீ­ர­கம் 46 வயது தமிழ்ப் பெண்­ணுக்கு மாற்­றீடு செய்யப்பட்டுள்ளது.

பதுளை மஹி­யங்­கனை வீதி­யைச் சேர்ந்த வை.கே.ல­க்ஷன் புரமோத்யா எனும் இந்த இளை­ஞர் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை நடந்த வீதி விபத்­தொன்­றில் சிக்கியதால் அவர் மூளைச் சாவு நிலை­யிலுள்­ளார்.

இந்த நி­லை­யில் அவ­ரது பெற்­றோ­ரின் சம்­ம­தத்­து­டன் அகற்றப்பட்ட சிறு­நீ­ர­கங்­க­ளில் ஒன்று கிளி­நொச்­சி­யைச் சேர்ந்த 46 வயது தமிழ்ப் பெண்­ணுக்­கும் மற்ற சிறு­நீ­ர­கம் குருநாகல் மல்­சி­ரி­புர பிர­தே­சத்­தைச் சேர்ந்த 48 வயது ஆணுக்கும் வெற்­றி­க­ர­மா­கப் பொருத்­தப்­பட்­டது.