இலங்கை பாடசாலை மாணவர்களுக்கு அடித்த அதிஷ்டம்..!

ஸ்ரீலங்காவில் 5 வயது தொடக்கம் 19 வயது வரையுள்ள மாணவர்களுக்காக புதிய காப்புறுதி திட்டத்தை அரசாங்கம் உருவாக்கி 2017 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் 2,700 மில்லியன் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

முன் மொழியப்பட்டுள்ள காப்புறுதி திட்டத்தில் ஒவ்வொரு மாணவருக்கும் தலா 200 000 ரூபா பெறுமதியான இலவச காப்புறுதியை வழங்க அரசு தீர்மானித்துள்ளது.

இக் காப்புறுதி திட்டத்தினூடாக வெளிச் சிகிச்சைகளுக்காக 10000 ரூபா வீதமும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் குறித்த காப்புறுதி தாரர்களுக்கு 75,000 ரூபா வீதமும் செலுத்தப்படவுள்ளது.

மாணவர்கள் அங்கவீனர்களாகும் போது 100,000 ரூபா வீதமும் காயமடைந்தால் 50,000 ரூபா வீதமும் காப்புறுதி தொகை வழங்கப்படவுள்ளது.

மேலும் பாடசாலை காலத்தின் போது மரணமடையும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு 100,000 ரூபா வீதமும் காப்புறுதி உரித்துடைய மாணவர்களின் பெற்றோர் மரணமடைந்தால் 75,000 ரூபா வீதமும் அரசு வழங்க திட்டமிட்டுள்ளது.

அமைச்சரவையில் நியமிக்கப்பட்ட நிலையியல் கொள்முதல் குழுவின் சிபாரிசின் பெயரில் 2348 மில்லியன் ரூபா வருடாந்த தவணையின் கீழ் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்திற்கு ஊடாக இத் திட்டத்தை செயற்படுத்துவது தொடர்பாக இன்று அமைச்சரவையில் முன் மொழியப்பட்ட ஆலோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.