நெடுந்­தீவில் தமிழ் பௌத்த அடையாளங்கள்

நெடுந்­தீவு – வெடி­ய­ர­சன் கோட்­டை­யில் பௌத்த ஆல­யத்துக்கான அடை­யா­ளங்­க­ளும் காணப்­ப­டு­வ­தாக சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கின்­றது. ஆனால் அவை தமிழ் பௌத்த அடை­யா­ளங்­களே அன்றி சிங்­கள பௌத்த அடை­யா­ளங்­கள் அல்ல – என தொல்­பொ­ருள் திணைக்­கள அதி­காரி தெரி­வித்­தார்.

நெடுந்­தீ­வுப் பிர­தேச செய­லா­ளர் பிரி­வுக்கான ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டம் கடந்­த­வா­ரம் இடம்­பெற்­றது. இதன் போதே மேற்­படி விட­யம் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது.

இது­தொ­டர்­பில் மேலும் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது:

தொல்­பொ­ருள் திணைக்­க­ளத்­தின் கீழ் அங்கு 8 இடங் கள்அடை­யா­ள­மி­டப்­பட்­டுள்­ளன. இதில் வெடி­ய­ர­சன் கோட்டை முக்கியமானதாக அடை­யா­ளங்­க­ளும் காணப்­ப­ட்டுள்ளது என அதி­காரி சுட்­டிக்­காட்­டி­ய­ போது, அவை தமிழ் பௌத்த அடை­யா­ளமா சிங்­கள பௌத்த அடை­யா­ளமா என இணைத் தலை­வ­ரால் கேட்கப்­பட்­டது.

அப்­போது தமிழ் பௌத்த அடை­யா­ளங்­க­ளா­கவே காணப்­ப­டு­வ­தாக கூறப்­ப­டு­கிறது என அதி­காரி பதி­ல­ளித்­தார்.

இதன்­போது குறுக்­கிட்ட மாகா­ண­சபை உறுப்­பி­னர் விந்­தன் கன­க­ரட்­ணம்,

‘‘அனைத்து தொல்­பொ­ருள் அடை­யா­ளங்­க­ளின் அரு­கி­லும் 3 மொழி­க­ளி­லு­மான அறி­வித்­தல் பல­கை­கள் நடு­மாறு தீர்­மா­னிக்­கப்­பட்­டது. அவை இன்­று­வ­ரை­யும் நடப்­ப­ட­வில்லை. அவை உடன் நிறை­வேற்ற வேண்­டும்’’–என்­றார்.