இலங்கையில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பெற்ற இளம் தாய்!

தியத்தலாவ வைத்தியசாலையில் தாய் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்துள்ளன.

நேற்று மாலை இந்த குழந்தைகள் பிறந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூன்றும் பெண் குழந்தைகள் எனவும், ஆரோக்கியமான நிலையில் உள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

21 வயதான சந்திரிக்கா தர்ஷினி என்பவருக்கும் 23 வயதான லக்ஷான் தனஞ்சய என்பவருக்குமே இந்த குழந்தைகள் பிறந்துள்ளன.

ஏழ்மையான இளம் குடும்பத்தினர், மூன்று பிள்ளைகளையும் வளர்ப்பதில் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.

இந்த குழந்தைகளை வளர்ப்பதற்கு பெற்றோர் உதவியை எதிர்பார்ப்பதாக வைத்திய அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.