ஊத்தை பவான் மட்டுமல்ல தூள் பவானும் புளொட்தான்! கசியும் உள்வீட்டு இரகசியங்கள்!!

ஊத்தை பவான் மட்டுமல்ல தூள் பவானும் புளொட்டில் இருந்தனர். மூன்றாவதாக வளர்ந்த பவான் என்பவரும் புளொட்டில் இருந்தார்.

புளொட்டில் இருந்தபோது அவரவர் செய்த வேலைகளுக்கும் குணங்களுக்கும் ஏற்ப பட்டப் பெயர்கள் ஏற்பட்டன.

இவ்வாறு தெரிவித்தனர் புளொட் அமைப்பின் உறுப்பினர்கள்.

பத்திரிகையாளர் சிவராமின் கொலையுடன் தொடர்புபட்டவர் புளொட் அமைப்பில் இருந்த ஊத்தை பவானே என்றும் மாகாண சபை உறுப்பினராக இருக்கும் பவான் எனப்படும் க.சிவநேசன் அல்லர் என்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விளக்கமளித்திருந்தார்.

அந்த விளக்கத்தைக் கேட்ட புளொட் அமைப்பின் உறுப்பினர்களே இந்த விவரங்களை தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:

புளொட்டில் மூன்று பவான்கள் இருந்தனர். ஒருவர் ஊத்தை பவான். அவர், குளிப்பதில்லை. அதனால் அவரை ஊத்தை பவான் என்று கிண்டலாகக் கூப்பிடுவார்கள். அவர் இப்போது உயிரோடு இல்லை. கொன்றுவிட்டார்கள்.

அமைப்பைச் சேர்ந்தவர்களேதான் அவரைக் கொன்றார்கள் என்றொரு கதை இன்று வரைக்கும் இருக்கிறது. மற்றொருவர் வளர்ந்த பவான். அவர் புலிகள் இயக்கத்தின் புலனாய்வு உறுப்பினராக இருந்தபோதும் எமது அமைப்பில் செயற்பட்டவர்.

சிவராம் கொலையாளி வடக்கு மாகாண சபை உறுப்பினரா ?

இப்போது வடக்கு மாகாண விவசாய அமைச்ச ராக நியமிக்கப்பட்டிருக்கின்ற க.சிவநேசனுக் கும் புளொட்டுக்குள் பவான் என்றே பெயர்.

அவரைத் தூள் பவான் என்று கூப்பிடுவர். அவரது நேரடிக் கட்டுப்பாட்டிலும் கண்காணிப்பிலும் தான் ஊத்தை பவான் உட்படப் பல செயற்பாட்டாளர்கள் போர்க் காலத்தில் இருந்தனர்.

தலைமைகள், பொறுப்புத் தளபதிகளுக்குத் தெரியாமல், அவர்களின் அனுமதி இல்லாமல் தான் ஊத்தை பவான் ஊடகவியலாளர் தராக்கி சிவராமைக் கொலை செய்தார்கள் என்று சொன்னால் ஊர் நம்பலாம் நாங்களுமா நம்பவேண்டும்?’’ என்று கேட்டனர் அந்த உறுப்பினர்கள்.

ஊடகவியலாளர் சிவராம் கொலையுடன் தொடர்புடையவர் என்பதால் க.சிவநேசனுக்கு (பவான்) அமைச்சுப் பதவி வழங்க முடியாது என்று முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் முன்னர் அவருக்குக் கடிதம் அனுப்பியிருந் தார். அதன் பின்னர் அது தொடர்பில் சிவநேசன் முதலமைச்சருக்கு விளக்கமளித்தார் என்று கூறப்படுகிறது.

அதன் பின்னர் சிவநேசன் முதலமைச்சரின் பரிந்துரைக்கு அமைவாக நேற்றுமுன்தினம் வடமாகாண விவசாய அமைச்சுப் பதவியை ஏற்றார்.

அமைச்சுப் பதவியேற்றபின் ஊடகவிய லாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர், “சிவராம் கொலையுடன் சிவநேசனுக்கு (பவான்) தொடர்பில்லை, அது ஊத்தை பவான். வேறொருவர்” என்று குறிப்பிட்டிருந்தார்.