மஹிந்தவின் முக்கிய சகா வைத்தியசாலையில்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சியின் முக்கியஸ்தருமான ஏ.எச்.எம். அஸ்வர் வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில தினங்களாக சுகயீனமுற்றிருந்த அவர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

இந்த நிலையில் அவரை சந்திப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் அஸ்வர், ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்திலுள்ள மூத்த அரசியல்வாதிகளில் ஒருவர் என்பதுபோல, நாடாளுமன்ற நிலையியற் கட்டளைச் சட்டம் மற்றும் ஒழுங்குப் பத்திரம் ஆகியவற்றை தயாரிப்பு பணிகளில் ஆரம்ப நாட்களில் முக்கிய பங்காற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.