சிவராம் கொலையாளி வடக்கு மாகாண சபை அமைச்சர்

வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவருக்கு ஊடகவியலாளர் சிவராம் கொலையில் தொடர்புடையவருக்கு வடக்கு மாகாண சபை அமைச்சர் பதவி.

மாகாணசபை உறுப்பினரின் அமைச்சுப் பதவிக் கோரிக்கையை நிராகரித்து, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எழுதிய கடிதத்தைத் தொடர்ந்து இந்தச் சர்ச்சை வெடித்திருந்தது.

வடக்கு மாகாண சபையில் வெற்றிடமான அமைச்சுப் பதவிகளை நிரப்புவதற்காக, தன்னை ஆதரிக்கும் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களிடமிருந்து சுயவிவரக் கோவையை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியிருந்தார்.

சுயவிவரக் கோவை அனுப்பிய உறுப்பினர்களில் ஒருவருக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில் அந்த உறுப்பினருக்கு அமைச்சுப் பதவியை வழங்க முடியாமல் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அதற்கு முலமைச்சர் கூறியுள்ள காரணம், ஊடகவியலாளர் சிவராம் கொலையில் உங்களுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவதால் - கருதப்படுவதால் அமைச்சுப் பதவியை வழங்க முடியாமல் இருக்கின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து இந்த விடயம் பெரும்பரபரப்பாகியுள்ளது. கொலைச் சந்தேகநபர் ஒருவர் மாகாணசபை உறுப்பினராக இருப்பதும், அவர் முதலமைச்சர் அணியில் இருந்து கொண்டு முதலமைச்சருக்கு ஆதரவு வழங்குவதும், அதைத் தெரிந்து கொண்டும், அதனை அறிந்த பின்னரும், முன்னாள் நீதியரசரான சி.வி.விக்னேஸ்வரன், அந்த உறுப்பினரின் தயவையும் வைத்துக் கொண்டு முதலமைச்சராக இருப்பதும் அரசியல் நோக்கர்களால் விநோதமான செயற்பாடாக நோக்கப்படுகின்றது.

இப்படி எல்லாம் கூறிய முதலமைச்சர் சிவராம் கொலையாளியை வெள்ளையடித்து அன்று கொலையாளி என்றவர் இன்று நல்லவராகியது விசித்திரமானது மட்டுமல்லாது முன்னள் நீதியரசரி வழங்கிய தீற்புக்கள் கூட தகுமா அல்லது நீதியுடன் இருந்திருக்குமா என்பது சந்தேகமே....