இலங்கையில் பாடசாலை மாணவியை கொடூரமாக கொலை செய்த ஆசாமி சிக்கினார்

இரத்தினபுரி - இறக்குவாணை - படேயாய பிரதேசத்தில் உயர்தர மாணவியொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் எதிர்வரும் மாதம் 6ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளர்.

மெல்மடுல்ல மேலதிக நீதவான் சரத் விஜேகுணவர்தன இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை , கொலை தொடர்பான பிரேத பரிசோதனை நேற்று இடம்பெற்றது.

இதன்போது , மாணவி கொலை செய்யப்படும் முன் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

இந்த கொலை தொடர்பில் படேயாய பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய நபரொருவரையே காவற்துறை கைது செய்தது.

உயிரிழந்த மாணவியின் தாய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ள நிலையில் , தனது தந்தையுடன் குறித்த மாணவி வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் , நேற்று முன்தினம் தந்தை வீட்டில் இல்லாத நேரம் வீட்டினுள் நுழைந்த சந்தேகநபர் மாணவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.

இதேவேளை , கொலை செய்யப்பட்ட பெண்ணின் காதலன் கொலை தொடர்பில் இவ்வாறான கருத்தை தெரிவித்திருந்தார்.

நான் அழைப்பொன்றை மேற்கொண்டேன் , அப்போது ஆண் ஒருவர் பேசினார். நான் கேட்டேன் யார் பேசுவது என்று .

அந்த நபர் போனை கட் செய்தார். மீண்டும் மீண்டும் அழைப்பை மேற்கொண்டேன். எல்லாவற்றையும் கட் செய்தார். பின்னர் கைப்பேசியை ஓப் செய்தார். அதனை தொடர்ந்து நான் மாமாவுக்கு அழைப்பை மேற்கொண்டு இது தொடர்பில் கூறினேன் என அந்த நபர் தெரிவித்திருந்தார்.