முதலமைச்சர் விக்கி மீது சீறிச் சினந்­த விதவைப் பெண்!! வெடித்தது பாரிய சிக்கல்

தமது பத­வியைத் தக்க வைப்ப­தற்­கா­க வும் புதி­தா­கப் பத­வி­யைப் பெறுவ­தற் கா­க­வும் எனது கண­வன் மீது பொய்க் குற்­றச்­சாட்­டுச் சுமத்த வேண்டாம் என்று தார்மீ­கக் கோபத்து­டன் சீறிச் சினந்­தார் புளொட் அமைப்பி­லிருந்து உயி­ரி­ழந்த ஊத்தை பவான் என அழைக் கப்­ப­டும் கந்­தையா செல்­வ­ரா­சாவின் மனைவி செ.யோக­ராணி.

‘‘எனது கண­வர் புளொட்­டில் இருந்த காலத்தில் எவ­ரை­யும் கொலை செய்­ய­வில்லை. அது எனக்கு நன்கு தெரி­யும். தமது பதவி­யைத் தக்­க­வைக்­க­வும் புதி­தா­கப் பதவி­யைப் பெற்றுக்­கொள்­ள­வும் சிலர் குழப்ப­மான – உண்­மைக்குப் புறம்­பான கதைகளை எனது கண­வர் இறந்த நிலை­யில் கூறு­வதை நான் கண்­டிக்­கின்­றேன்’’ என்று தெரி­வித்­தார் யோக­ராணி.

பிர­பல பத்­தி­ரி­கை­யா­ளர் தராக்கி சிவராம் கொலை­யு­டன் தொடர்பு­பட்­ட­வர் புளொட் அமைப்­பைச் சேர்ந்த ஊத்தை பவான் என் ப­வரே என்று வடக்கு மாகாண முத­லமைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் அண்­மையில் பகி ரங்­க ­மா­கத் தெரி­வித்­தி­ருந்­தார்.

அது குறித்­துக் கருத்­துத் தெரி­வித்­த­போதே யோக­ராணி அறச் சீற்­றத்­து­டன் தனது கண­வன் மீது பழி­போட்­ட­வர்­களை நிந்­தித்­தார்.

தராக்கி சிவ­ராம் கொலை­யு­டன் தொடர் பு­டை­ய­வர் என்­கிற குற்­றச்­சாட்டு தெரி­விக்­கப்­ப­டு­வ­தன் கார­ணத்­தால் வடக்கு மாகாண சபை உறுப்­பி­ன­ரான கந்­தையா சிவ­நே­ச­னுக்கு(தூள் பவான்) அமைச்­சர் பதவி வழங்க முடி­யாது என்று முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் அறி­வித்­தி­ருந்­தார்.

இது தொடர்­பில் தூள் பவா­னுக்கு கடி­தம் ஒன்­றை­யும் அனுப்பி வைத்­தி­ருந்­தார். ஆனால், அண்­மை­யில் நடந்த வடக்கு மாகாண அமைச்­ச­ரவை மாற்­றத்­தின்­போது தூள் பவான் எனப்­ப­டும் கந்­தையா சிவ­நே­ச­னுக்கு விவ­சாய அமைச்­சுப் பதவி வழங்­கப்­பட்­டது.

கொலைச் சந்­தே­க­ந­பர் என்று கூறி முன்­னர் நிரா­க­ரித்த நப­ருக்கு இப்­போது எப்­படி அமைச்­ச­ராக நிய­ம­னம் வழங்­கி­னீர்­கள் என்று செய்­தி­யா­ளர்­கள் முத­ல­மைச்­ச­ரி­டம் கேட்­ட­னர்.

அதற்­குப் பதி­ல­ளித்த சி.வி.வின்­னேஸ்­வ­ரன், ‘‘தூள் பவன் எனப்­ப­டும் சிவ­நே­சன் குற்­ற­மற்­ற­வர் என்று தெரிந்­த­தால் அமைச்­சுப் பதவி வழங்­கத் தீர்­மா­னித்­தேன். சிவ­ராம் கொலை­யில் தொடர்­பு­பட்­டது இவ­ரல்­லர் அது ஊத்­தை­ப­வான்­தான்’’ என்று தெரி­வித்­தி­ருந்­தார்.

முத­ல­மைச்­சர் கூறிய புளொட்­டின் ஊத்தை பவான் எனப்­ப­டும் கந்­தையா செல்­வ­ரா­சா­வின் குடும்­பத்­தி­னர் தற்­போ­தும் வவு­னியா மாவட்­டத்­தில் வசித்து வரு­கின்­ற­னர். முத­ல­மைச்­ச­ரின் கருத்­தால் வெகுண்­டெ­ழுந்­துள்ள செல்­வ­ரா­சா­வின் மனைவி தனது கண­வன் பற்­றிய விவ­ரங்­களை வெளியிட்டார்.

அவர் தெரி­வித்­த­தா­வது:

1989ஆம் ஆண்டு நான் திரு­ம­ணம் செய்­தேன். எனக்கு இப்­போது 5 பெண்­பிள்­ளை­க­ளும் ஒரு ஆண்­பிள்­ளை­யும் இருக்­கின்­ற­னர். எனது கண­வர் புளொட் அமைப்­பின் நட­வ­டிக்­கை­யில் ஈடு­பட்ட காலத்­தில் அவர் செய்­கின்ற நட­வ­டிக்­கை­கள் முழு­வ­தும் எனக்­குத் தெரி­யும்.

அவர் யாரை­யும் கொலை செய்­ய­வில்லை. அநி­யா­ய­மாக எனது கண­வர் மீது கொலைக்­குற்­றச்­சாட்டை சுமத்­து­கின்­றார்­கள். முத­ல­மைச்­சர் கூறி­யதை நான் மறுக்­கின்­றேன். எனது கண­வனை ஊத்தை பவான் என்று அமைப்­பில் கூப்­பி­டு­வார்­கள். அதற்­காக அவர் குற்­றம் செய்­த­வர் என்று அர்த்­த­மல்ல.

பத­விக்­காக எனது கண­வன் மீது குற்­றத்தை சுமத்த முயற்­சிக்­கின்­றார்­கள். அதை ஏற்­றுக் கொள்ள முடி­யாது.

எனது கண­வன் 2008ஆம் ஆண்டு மே மாதம் பூந்­தோட்­டம் சந்­திப் பகு­தி­யில் வைத்­துச் சுட்­டுக் கொல்­லப்­பட்­டார்.

அவ­ரது அமைப்­பைச் சேர்ந்த வேறு சில­ரா­லேயே அவர் கொல்­லப்­பட்­டார் என்று எனக்கு தக­வல் கிடைத்­தது. அவர்­கள்­தான் இப்­போது எனது கண­வர் மீது வீண் பழி சுமத்­து­கி­றார்­கள்’’ – என்­றார்.