இலங்கை உட்பட பல நாடுகளில் பேஸ்புக் முடங்கியது!! காரணம் என்ன?

சமூகவலைத்தளங்களில் முன்னணியாக இருக்கும் பேஸ்புக் இணையத்தளம் திடீரென செயற்படாத காரணத்தால் பல நாடுகளில் பேஸ்புக் பயனாளர்கள் மக்கள் சிரமத்திற்கு முகம்கொடுத்துள்ளனர்.

இந்த வாரத்தின் இரண்டாவது முறையாக இவ்வாறு பேஸ்புக் முடங்கியுள்ளது.

இந்த பிரச்சினை குறிப்பாக இலங்கை , இந்தியா, பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் வடக்கு ஐரோப்பாவில் தான் அதிகமாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலிபோர்னியாவை அடிப்படையாகக் கொண்ட தளத்தின் தொழில்நுட்ப கோளாறுகளின் காரணமாகவே இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.