அதிகாலையில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற சொகுசு வானிற்கு காத்திருந்த சோகம்

புதுமனைபுகுவிழாவிற்குச் சென்றுவிட்டு திரும்பிய முச்சக்கரவண்டி ஓமந்தையில் விபத்துக்குள்ளானதில் தந்தை இரு மகன் உட்பட 5பேர் படுகாயமடைந்துள்ளனர்.

முச்சக்கரவண்டி சாரதி ஆபத்தான நிலையில் அதிதீவிர சிக்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிக்சை பெற்று வருகின்றார்.

வவுனியா ஓமந்தை பறநட்டான்கல் பகுதியில் இன்று அதிகாலை 12.25மணிக்கு முச்சக்கரவண்டியுடன் சொகுசு வான் மோதியதில் 5பேர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதிகாலை 12.25மணிக்கு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற சொகுசு வான் முச்சக்கரவண்டியுடன் மோதியதில் முச்சக்கரவண்டி கடுமையாக சேதமடைந்துள்ளது.

இதில் பயணம் மேற்கொண்ட மலையாண்டி செல்வகுமார் 43 வயது, செல்வகுமார் லக்சன் வயது 13, செல்வக்குமார் டிலக்சன் வயது 11, ஜெயச்சந்திரன் றோசான் வயது 16, லோகநாதன் டிலக்சன் வயது 14 ஆகிய ஜந்து பேரும் படுகாயமடைந்து வவுனியா பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கொழும்பிவிருந்து சொகுசு வானில் பயணித்த 7 சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் நீதிமன்ற நடவடிக்கைக்கு சென்றுள்ளனர்.

எனினும் சொகுசு வானின் சாரதியை விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் ஓமந்தை பொலிசார் தெரிவித்துள்ளனர்.