யாழில் பட்டப்பகலில் வசமாக மாட்டிய திருடன்

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் பட்டப்பகலில் திருடமுற்பட்ட திருடர்கள் ஊரவர்களிடம் வசமாக மாட்டிய சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் இன்று(29) காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கோண்டாவில் பகுதியை சேர்ந்த வைத்தியரின் வீடு ஒன்றில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டிற்கு திருடச்சென்ற திருடர்கள் வீட்டாரிடம் மாட்டிய நிலையில் தப்பி சென்றனர்.

இந்நிலையில் குறித்த பகுதி இளைஞர்கள் திருடர்களை பிடிக்க முற்பட்டபோது ஒரு திருடன் மாத்திரம் அகப்பட்டார்.

இந்நிலையில் ஏனைய இரண்டு திருடர்களும் தப்பி சென்றுள்ளனர்.

இதேவேளை பிடிபட்ட சிறுவனை நன்கு கவனித்த குறித்த பகுதி மக்கள் கோப்பாய் பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.

இதேவேளை குறித்த திருடன் 40 ஆயிரம் ரூபா வைத்திருந்ததாகவும் குறித்த வைத்தியர் வீட்டில் 1 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாவை திருடியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் கோப்பாய் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை மானிப்பாய் சோதி வேம்படி வீதியில் இன்று காலை 5.30 மணியளவில் பெண்ணொருவர் அணிந்திருந்த 15 பவுண் பெறுமதியான தாலிக்கொடி திருடர்களால் அறுக்கப்பட்டுள்ளது.

காலையில் பிரத்தியேக வகுப்பிற்காக பிள்ளை அழைத்து வந்த பெண்ணிண் தாலி;க்கொடியே இவ்வாறு அறுக்கப்பட்டுள்ளது.