ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக விவரணப் படத்தை வெளியிட்ட சனல் 4

ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி விவரணப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளதாக தெரியவருகிறது.

பிரேசில் நீதிமன்றத்தில் ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு அடுத்த 24 மணி நேரத்தில் இந்த விவரணப் படத்தை சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பியுள்ளது.

இந்த விவரணப் படத்தை கெலம் மெக்ரே தயாரித்துள்ளார். இவர் ஏற்கனவே இலங்கையின் போர் குற்றங்கள் தொடர்பான இரண்டு விவரணப் படங்களை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெனரல் ஜகத் ஜயசூரிய, போர் நடைபெற்ற காலத்தில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தி சர்வதேச மனித உரிமை அமைப்பொன்று பிரேசில் உட்பட இரண்டு நாடுகளில் வழக்குகளை தாக்கல் செய்துள்ளது.