மஹிந்தவுக்கு கதிரை தயார்.!

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­வுக்கு 66ஆவது மாநாட்டில் பங்­கேற்­ப­தற்கு மூன்­றா­வது அழைப்­பினை நான் விடுக்­கின்றேன். மாநாட்டில் அவ­ருக்கு உரிய கதி­ரையும் தயா­ரா­கவே உள்­ளது என பிரதி அமைச்சர் நிஷாந்த முத்­து­ஹெட்­டி­கம தெரி­வித்தார்.

மஹிந்த ராஜ­பக் ஷ தாய் வீட்­டிற்கு வரும்­போது வர­வேற்க தயா­ரா­கவே இருக்­கின்றோம் என்று குறிப்­பிட்ட அவர் மைத்­தி­ரி­யையும் மஹிந்­த­வையும் வேறு­வே­றாக பார்க்­க­வில்­லை­யென்றும் 66 ஆவது மாநாடே ஒன்­றி­ணை­வ­தற்­கான உரிய சந்­தர்ப்பம் எனவும் குறிப்­பிட்­டுள்ளார்.

சுதந்­தி­ரக்­கட்­சியின் 66ஆவது மாநாடு தொடர்பில் தெளி­வு­ப­டுத்தும் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு காலியில் நடை­பெற்­றது. அதில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு மேலும் தெரி­வித்­த­தா­வது,

ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சிக்குள் பல குழப்­பங்கள் காணப்­ப­டு­வ­தா­கவும் கட்­சியை அங்கும் இங்கும் இழுத்­துச்­செல்­வ­தா­கவும் அண்­மைக்­கா­லங்­களில் குற்­றச்­சாட்­டுகள் எழுந்­தி­ருந்­தன. எவ்­வா­றா­யினும் கட்­சியின் 66ஆவது ஆண்டு நிறைவு மாநாட்டில் அனை­வரும் ஒன்­று­கூ­டு­வ­தற்­கான சந்­தப்பம் ஏற்­பட்­டுள்­ளது.

66ஆவது ஆண்டு மட்டும் அல்ல 70ஆவது ஆண்டு நிறைவு மாநாடும் சுதந்­தி­ரக்­கட்சி தலை­மை­யி­லான அர­சாங்­கத்தின் கீழ் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலை­மைத்­து­வத்தின் கீழ் நிச்­ச­ய­மாக நடை­பெறும் என்­பதை நான் உறு­தி­யுடன் கூறு­கின்றேன்.

ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியை வர­லாற்றில் நோக்கும் போது நெருக்­க­டி­களைச் சந்­தித்து வெற்­றி­பெற்­றுள்­ள­மையை அவ­தா­னிக்க முடியும். சுதந்­தி­ரக்­கட்­சி­யுடன் சிறு கட்­சிகள் கூட்­ட­ணியைக் கொண்­டி­ருக்­கின்ற போதும் சிறு குழு­வொன்று சுதந்­தி­ரக்­கட்­சியை சிதைத்­துக்­கொண்டு செல்­வ­தற்கு முயற்­சிக்­கின்­றது.

அதே­நேரம் அந்­தக்­கு­ழு­வி­ன­ருக்கு தலை­மைத்­து­வத்­தினை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ வழங்­கு­கின்றார். முன்னாள் ஜனா­தி­பதி மஹி ந்த ராஜ­ப­க்ஷவே நீங்கள் தற்­போதும் ஜனா­தி­பதி தான். உங்­க­ளுக்கு ஏற்­க­னவே இரண்டு அழைப்­புக்கள் விடுக்­கப்­பட்­டுள்­ளது. நான் மூன்­றா­வது தட­வை­யா­கவும் அழைப்பு விடு­கின்றேன். நீங்கள் கட்­டா­ய­மாக 66ஆவது மாநாட்­டுக்கு வருகை தர­வேண்டும்.

மாநாட்டில் உங்­க­ளுக்கு பொருத்­த­மான கதி­ரையை நாம் தயா­ராக வைத்­துள்ளோம். மைத்­தி­ரி­பால சிறி­சேன எங்­கி­ருக்­கின்­றாரோ அங்கே தான் உங்­க­ளுக்கும் ஆசனம் வைக்­கப்­பட்­டுள்­ளது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வையும் உங்­க­ளையும் நாங்கள் இரு­வ­ராகப் பார்க்­க­வில்லை. ஒரு­வ­ரா­கவே பார்க்­கின்றோம்.

அதே­நேரம் உங்­களை நாங்கள் இவ்­வ­ளவு தூரம் ஏன் அழைக்­கின்றோம் என்று சற்று சிந்­தித்துப் பாருங்கள். நீங்கள் தவா­றான ஓர் இடத்தில் இருக்­கின்­றீர்கள். நீங்கள் தாய்­வீட்­டுக்கு வருகை தரும்­போது உரிய மரி­யா­தை­க­ளுடன் வர­வேற்க தயா­ர­கவே உள்ளோம்.

நீங்கள் வரு­வது எமது கட்­சிக்கு பெரும்­ப­ல­மாகும். அடுத்த தேர்­தலில் சுதந்­தி­ரக்­கட்சி வெற்றி பெறுவதற்கு நீங்கள் எம்முடன் இருக்க வேண்டும். நீங்களும்(மஹிந்தவும்) மைத்திரியும் இரண்டு பக்கம் இருந்து விளையாட்டு வீட்டை அமைக்காது எங்களையும் நெருக்கடிக்குள்ளாக்காது சக்தி மிக்க அத்திவாரத்தினை சுதந்திரக்கட்சிக்கு இடுவதற்காக ஒன்றிணையுமாறு கோரிக்கை விடுகின்றேன் என்றார்.