தமிழ்நாடு இலங்கை போன்றவற்றுக்கு காத்திருக்கும் பேரழிவு! மிரட்டுகின்றது ஆய்வு

உலகின் வெப்பநிலை அதிகரிப்பதன் காரணமாக அண்டார்டிகாவில் உள்ள பனிப்பாறைகள் அதிக அளவில் உருகி வருவதால் எதிர்வரும் 2050ஆம் ஆண்டளவில் கடல் மட்டம் 4.8 மீற்றரினால் உயரும் என ஆய்வு அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கு அந்தாட்டிக்கா பகுதியில் கடலுக்கு அடியிலும், அதன் மேல் பகுதியிலும் பாரியளவிலான பனிப்பாறைகள் உள்ளன. அவை தற்சமயம் சிறிது சிறிதாக உருகி வருகின்றன. இதனால் 2050ஆம் ஆண்டில் கடல் மட்டம் 4.8 மீற்றர் அளவிற்கு உயரும் என்று தெரியவந்துள்ளது.

அத்துடன் கிழக்கு அந்தாட்டிக்காவிலும் பனிப்பாறைகள் மிக வேகமாக உருகி வருவதனால், இதன் காரணமாக கடல் நீர்மட்டம் 3.4 மீற்றர் உயரம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இது தவிர, தமிழ் நாடு சுற்றுச்சூழல் துறையின் கீழ் செயற்படும் ”பருவநிலை மாற்ற செயல்திட்டம்” என்ற அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்கூட சர்வதேச ரீதியாக கடல் மட்டம் உயர்வது குறித்து விளக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான ஒரு சூழ்னிலையில், தென்னிந்தியா, இலங்கை உட்பட தென் கிழக்காசிய நாடுகளிலும் கடல் மட்டம் உயர்வதனால் மிகப்பெரிய விளைவுகள் ஏற்படும் என அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.