இலங்கையில் இரவில் பெண்ணாக மாறிய ஆணிற்கு நடந்த விபரீதம்

தம்புள்ளை நகரில் அமைந்துள்ள வடகை வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் கொலை செய்யப்பட்டுள்ள இளைஞர் ஒருவரின் சடலம் இன்று(05) அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.

பொல்லினால் தாக்கி இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளவர் தம்புள்ளை - கலுன்தேவ - வல்கம்வெவ பிரதேசத்தை சேர்ந்த சனத் குமரா என்ற 34 வயதான இளைஞர் என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கொலை செய்யப்பட்டுள்ள இளைஞர் தொடர்ந்து தம்புள்ளை நகரில் இரவு வேளையில் பெண்களின் ஆடைகளை அணிந்து உலாவுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அந்த இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட போது பெண்கள் அணியும் உடைக்கு சமமான உடையினை அணிந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை இந்த இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளதை கண்ட நபரொருவர் காவல்துறைக்கு அறிவித்துள்ளார்.

இந்த இளைஞர் இவ்வாறு பெண்களின் உடை அணிந்து இரவு வேளையில் உலாவிய போது, பல முறை கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

கொலைக்கான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் காவல்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.