தர்மலிங்கம் மற்றும் ஆலாலசுந்தரம் இருவரையும் சுட்டுக் கொன்றது ரெலோ

மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் மற்றும் ஆலாலசுந்தரம் இருவரையும் சுட்டுக் கொன்றது ரெலோ இயக்கமாகும்.

இந்திய உளவுத்துறையான றோ ரெலோ இயக்கத்தை நம்பலாம் என்பதை எண்பிக்கவே ரெலோ இயக்கம் இந்த இருவரையும் சுட்டுக் கொன்று தனது விசுவாசத்தை எண்பித்துக் காட்டியது. சிறிது காலம் இந்தக் கொலையைச் செய்தவர்கள் வி.புலிகள் என்ற எண்ணம் இருந்தது.

இல்லை விடுதலைப் புலிகள் அல்ல ரெலோ இயக்கமே தனது தந்தையைக் கொன்றது என சித்தார்த்தன் பகிரங்கமாக அறிவித்தார்.

புளட் இயக்கம் ஒன்றும் புனிதமான இயக்கம் அல்ல. புளட் அமைப்பின் முன்னாள் பொதுச் செயலாளர்ரை சிவராம் அவர்களை கடத்திக் கொன்றது புளட் அமைப்பே.

கடத்தலுக்கும் கொலைக்கும் பயன்படுத்தப்பட்ட வாகனம் சித்தார்த்தனது உத்தியோக வாகனம். எதிரியை தோற்கடிக்க ஆயுதம் ஏந்திய இயக்கங்கள் தங்களைத் தாங்களே அழித்துக் கொண்டார்கள்.

புளட் கடைசிவரை - மே 18 வரை - அரச படைகளோடு சேர்ந்து வி.புலிகளை எதிர்த்துப் போரிட்டது. போர் முடிந்த கையோடு சித்தார்த்தன் "வி.புலிகளை அழித்ததில் புளட்டுக்கு கணிசமான பங்கு உண்டு" என மார் தட்டிக் கொண்டார்.

வவுனியாவில் புளட் இயக்கம் கடத்தல், கப்பம் வாங்குதல், சித்திரைவதை செய்தல், கொலை போன்ற வன்செயல்களைச் செய்தது.

இதில் இப்போது விவசாய அமைச்சராக பதவி ஏற்றுள்ள கந்தையா சிவநேசனும் ஒருவர். சிவநேசனுக்கு அமைச்சர் பதவி வழங்கியதை அதே அமைப்பைச் சேர்ந்த லிங்கநாதன் எதிர்த்திருக்கிறார்.

Veluppillai Thangavelu ( facebook )

32 ஆண்டுகள் கடந்து விட்டபோதும் இறப்பிற்கான காரணம் இன்றுவரை தெரியாதவர்களாகவே இருக்கின்றோம். சித்தார்த்தன்

தந்தை தர்மலிங்கம் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இறந்து இன்று 32 ஆண்டுகள் கடந்து விட்டபோதும் இவர்களின் இறப்பிற்கான காரணம் இன்றுவரை தெரியாதவர்களாகவே இருக்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தலமலிங்கத்தின் மகனுமான சித்தார்த்தன் தெரிவித்தார்.

உடுவில் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கத்தின் 32ஆவது நினைவு தினம் அவரது நினைவுத் தூபியின் அருகே நேற்றைய தினம் இடம்பெற்றது இதில் கலந்து கொண்டு நன்றி உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,

தந்தை தர்மலிங்கம் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இறந்து இன்று 32 ஆண்டுகள் கடந்து விட்டபோதும் இவர்களின் இறப்பிற்கான காரணம் இன்றுவரை தெரியாதவர்களாகவே இருக்கின்றோம். அதாவது . அன்று எனது தந்தை தர்மலிங்கம் அவர்களோடு ஆலாலசுந்தரம் மற்றும் இவர்களைப்போன்ற மிதவாதிகளான அமிர்தலிங்கம் , யோகேஸ்வரன் போன்றோரின் மரணங்கள் எதனால் இடம்பெற்றது. என இன்றுவரை கண்டறியப்படவில்லை.

அதாவது இவர்கள் ஏன் கொல்லட்பட்டார்கள் என என்பது இன்றுவரை எமக்கும் தெரியாது அதேபோல் இவ்வாறான தலைவர்கள் ஏன் கொல்லப்பட்டார்கள் என்பது மக்களும் அறியவில்லை. இவ்வாறான தலைவர்களை ஏன் கொன்றோம் என கொன்றவர்களும் அறிந்திருக்கவில்லை. என்றார்.

குறித்த நிகழ்வுக்கு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஆ.சுமந்திரன் வட மாகாண எதிர்கட்சித்தலைவர் சி.தவராசா, வட மாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன் கேசவன் சயந்தன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அமிர்தலிங்கத்தின் மகன் பகீரதன் ஆகியோருடன் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டு அவரது தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

Veluppillai Thangavelu ( facebook )


you may like this..