உலக யுத்தம் ஒன்றுக்கு தயாராகிறதா வடகொரியா?

வடகொரியாவின் தலைவர் கிம் ஜொங் -யுன் யுத்தத்துக்கு வழி கோருவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் தூதுவர் நிக்கி ஹலே இதனைத் தெரிவித்துள்ளார்.

பல்வேறு கண்டனங்களையும், தடைகளையும் மீறி, வடகொரியா கடந்த தினம் அணுகுண்டு சோதனையை நடத்தி இருந்தது.

மேலும் பல ஏவுகணை சோதனைகளையும் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் வடகொரியா அறிவித்திருக்கிறது.

இதன் ஊடாக உலக யுத்தம் ஒன்றுக்கு வடகொரியா வலிந்து அழைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், வடகொரியாவிற்கு எதிரான கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கும் வகையிலான பிரேரணை ஒன்றையும் அமெரிக்கா ஐக்கிய நாடுகள் சபையில் முன்வைக்கவுள்ளது.